தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மேலும் ஓர் இயந்திரத்திற்கு காப்புரிமை…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடியில் ஒரு பரு கரணை வெட்டும் இயந்திரத்திற்கு காப்புரிமை வழங்கப்பட்டது.

கரும்பு சாகுபடியில் நடவு, களையெடுத்தல், மண் அணைத்தல், மருந்தடித்தல் மற்றும் அறுவடை போன்ற வேலைகள், மற்ற பயிர் சாகுபடி செய்வதைக் காட்டிலும் மிகவும் கடினமான வேலையாகும்.

தொழிலாளர்கள் மூலம் கரும்பு கரணை வெட்டுவதற்கு கூர்மையான கத்தியை பயன்படுத்தி வெட்டும் போது கணிசமான அளவிற்கு கரணைகளின் கணுக்கள் சேதமடைகின்றன. மேலும் இந்த பணிகளை செய்து முடிக்க அதிக நேரமும், அதிக செலவும் மற்றும் அதிக மனச்சோர்வும் ஏற்படுகிறது. மேலும், கரும்புகள் ஒரே சீராக மற்றும் பருமனான கரும்புகளை அதிக எண்ணிக்கையில் பேற நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, எஞ்சினால் இயங்கும் ஒரு பரு கரும்பு கரணை வெட்டும் இயந்திரம் வடிவமைக்கப்பட்டது. இயந்திரமானது 4 குதிரைத்திறன் கொண்ட எஞ்சினால் இயங்கவல்லது. இதில் பிரதான சட்டம், எஞ்சின், விசை பரிமாற்று தண்டு, வட்டு ரம்பம் மற்றும் விசை பரிமாற்று கச்சைகள், பாதுகாப்பு மூடி, வெட்டும் கரும்புகள் வைக்கும் இடம், கரணைகள் வெளிவரும் அறை, நேரம், கரணை கணக்கீடும் சாதனம்அதிர்வை குறைக்கும் பகுதி மற்றும் போக்குவரத்து சக்கரங்கள் பாகங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கரும்புகள் வெளிவரும் அறையின் உள் பகுதியில் தெர்மாக்கோல் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் கரும்பு கரணையின் சேதாரம் குறைக்கப்படுகிறது. நேரம் மற்றும் கரணை கணக்கீடு கருவியின் மூலம் வெட்டப்படும் கரணைகளின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது.

இது 12V பேட்டரியால் இயக்கப்படுகிறது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு ஏற்ப 4 சக்கங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
கரணைகள் பிசிறு இல்லாமலும், சேதாரம் இல்லாமலும் வெட்ட, வட்டு ரம்பத்தின் சுழற்சி வேகம் ஒரு நிமிடத்திற்கு 2200 சுற்றுகள் இருக்க வேண்டும்ஒரு மணி நேரத்தில், 1700 ஒரு பரு கருணைகள் வெட்ட முடியும்.

முளைப்புத்திறன் 95 சதவீதம், 50 சதவிதத்திற்கு மேல் நேரம் மற்றும் செலவை குறைக்க முடியும். இவ்வியந்திரத்தின் விலை ரூ.34,000மேலும், இக்கருவிக்கான காப்புரிமையை இந்தியாவின் அறிவுசார் சொத்து அலுவலகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு 20 ஆண்டுகளுக்கு வழங்கியுள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 2026: என்ன செய்யலாம்? என்ன கூடாது?

மார்ச் 3ம் தேதி நடைபெறும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மற்றும் ரத்த நிலவு பற்றிய முழு தகவல்கள். கிரகண நேரம், பார்க்கலாமா?, என்ன செய்யலாம்? தெரிந்துகொள்ளுங்கள்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.