பில்லூர் அருகே யானைகளுக்கு இடையே மோதல்- யானை உயிரிழப்பு…

கோவை: பில்லூர் அணை பகுதியில் இரு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு யானை உயிரிழந்தது.

மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அருகே வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. குறிப்பாக காட்டுயானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது.

Advertisement

இந்நிலையில் நேற்று இரவு யானை கூட்டம் ஒன்று பில்லூர் அணை பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதில் இரண்டு யானைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இரண்டு யானைகளும் ஒன்றுக்கொன்று கடுமையாக மோதிக்கொண்ட நிலையில் அதில் ஒரு ஆண்யானைக்கு கழுத்து, தும்பிக்கை, கால், வயிற்று பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயமடைந்த அந்த ஆண்யானை தாக்குபிடிக்க முடியாமல் அங்கேயே விழுந்த நிலையில் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளது.

Advertisement

இன்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் யானை உயிரிழந்திருப்பதை கண்டு வனத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யும் பணிகளை துவக்கி உள்ளனர்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

தீபாவளி பண்டிகை- கொடிசியாவில் தற்காலிக பேருந்து முனையம்…

கோவை: தீபாவளிக்கு முன்னிட்டு இன்று முதல் கொடிசியா மைதானத்தில் தற்காலிக ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. 8ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அனைவரும் அதற்கு தயாராகி வருகின்றனர். புத்தாடைகள், வாங்குவது,...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...