கோவை: கோவையில் இந்த வாரம் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த வார வானிலை நிலவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
செப்டம்பர் 8 (திங்கள்):
வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படு. சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்ப நிலை குறைந்தபட்சம் 23° C முதல் அதிகபட்சம் 33° C வரை பதிவாகலாம்.
செப்டம்பர் 9 (செவ்வாய்):
வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. குறைந்தபட்சம் 23° C முதல் அதிகபட்சம் 34° C வரை வெப்பம் பதிவாகும்.
செப்டம்பர் 10 (புதன்):
புதன் கிழமையன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் /மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது, அன்றைய தினம் குறைந்தபட்சம் 23° C முதல் அதிகபட்சம் 34° C வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 11 (வியாழன்):
வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யலாம். வெப்ப நிலை குறைந்தபட்சம் 23° C முதல் அதிகபட்சம் 34° C வரை பதிவாகலாம்.
செப்டம்பர் 12, (வெள்ளி):
இந்த நாளில் மழைக்கு வாய்ப்பில்லை என்றாலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்ப நிலை, குறைந்தபட்சம் 23° C முதல் அதிகபட்சம் 34° C வரை பதிவாகலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 13 (சனி):
மழைக்கு வாய்ப்பு இல்லை. வெப்ப நிலை: அதிகபட்சம் 34° C, குறைந்தபட்சம் 23° C.
செப்டம்பர் 14 (ஞாயிறு):
வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மழைக்கு வாய்ப்பு இல்லை. வெப்பநிலை குறைந்தபட்சம் 22° C முதல் அதிகபட்சம் 34° C வரை பதிவாகலாம்
கோவையில் அடுத்த ஏழு நாட்களில் பகலில் வெப்பநிலை 33–34° C இடையே இருக்கும். இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 22–23° C ஆகக் காணப்படும்.
வானிலை மையத்தின் கணிப்புகள் மாறுதலுக்கு உட்பட்டவை. வானிலையில் மாற்றம் ஏற்படுவது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் போது அவை நம் தளத்தில் பதிவிடப்படும்.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈