கோவைக்கான இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

கோவை: கோவைக்கான இன்றைய வானிலை முன்னறிவிப்பை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கோவை மாவட்டத்தில் நேற்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. நகரப்பகுதிகளில் மழைப் பொழிவு காணப்படாத நிலையில், மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள சில இடங்களில் மட்டும் நேற்று மழை பெய்தது.

இதனிடையே இன்று கோவை, நீலகிரி, சென்னை உட்பட 7 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

தனியார் வானிலை ஆய்வு நிறுவனம் குறிப்பிடுகையில், “கோவையில் இன்று குறைந்தது 24 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.

காலை நேரத்தில் நகரின் ஒரு சில இடங்களில் சாரல் மழைக்கு வாய்ப்புள்ளது. காலை 11 மணிக்கு மேல் நகர் மற்றும் புறநகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

Recent News

Video

Join WhatsApp