கோவையில் உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த வாலிபர்!

கோவை: கோவையில் உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு சென்ற வாலிபர் பெண்ணுடன் இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டி ரூ.1.30 லட்சம் பறித்த கும்பல்.

கோவையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆன்லைன் ஆப் மூலம் உல்லாசத்திற்கு பெண்களை அனுப்பி வைக்கும் புரோக்கரை தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது அந்த நபர் ஆர் எஸ் புரம் அருகே உள்ள காந்தி பார்க் அருகில் அழகான இளம் பெண் இருப்பதாகவும் வீட்டிற்கு வந்தால் அவருடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இதை நம்பிய அந்த வாலிபர் கனவுகளுடன் அவர் கூறிய இடத்திற்கு சென்றார். பிறகு, அந்த வீட்டில் இளம்பெண்ணும் அவரும் தனியாக இருந்துள்ளனர்.

அப்போது திடீரென்று அத்துமீறி 4 நபர்கள் நுழைந்துள்ளனர். அவர்கள் சுதாகரிப்பதற்குள் இருவரையும் அரைகுறை கோலத்தில் படம் எடுத்துள்ளனர்.

பிறகு அந்த வாலிபரிடம் இதை செல்போனில் பிறருக்கு அனுப்பி விடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் அவரிடம் இருந்த ரூ.80 ஆயிரத்தை மிரட்டல் கும்பல் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

அதேபோன்று அந்த வாலிபரிடம் அவரது மனைவியின் செல்போன் நம்பரை வாங்கிய கும்பல் அவரையும் தொடர்பு கொண்டு கணவரின் அரைகுறை படத்தை பிறருக்கு அனுப்பி விடுவோம் என்று கூறி மிரட்டி ஐம்பதாயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளனர்.

பிறகு அவரை அங்கிருந்து அடித்து விரட்டினர். இதனால் ஆசைப்பட்டு சென்று அனைத்தையும் இழந்து விட்டோமே என்று வேதனடைந்த வாலிபர் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் செய்துள்ளார்.

போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணையில் 4 பேரும் சிக்கியுள்ளனர். அந்த கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp