கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்- கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி…

கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான் அவர்களை ஒருநாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Advertisement

கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி கூட்டு பாலில் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரையும் ஒரு நாள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கோவையில் நவம்பர் 2ம் தேதி இரவு விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி அவரது ஆண் நண்பருடன் பேசிகொண்டிருந்த போது அங்கு வந்த மூன்று பேர் அவர்களை தாக்கினர்.

அதில் மாணவியின் ஆண் நண்பர் படுகாயம் அடைந்த நிலையில் கல்லூரி மாணவி அந்த மூன்று பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குணா என்கிற தவசி, சதீஷ் என்கிற கருப்பசாமி, கார்த்தி என்கிற காளீஸ்வரன் ஆகியோரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர் .

Advertisement

இதனை அடுத்து மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முதல்வர் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். மேலும் அடையாள அணிவகுப்பு உள்ளிட்ட பணிகளை காவல்துறையினர் முடித்துள்ளனர்.

இந்நிலையில் மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க பீளமேடு போலிசார் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Advertisement

மனுவை விசாரித்த நீதிபதி சிந்து ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். கால்களில் சுடப்பட்ட மூவரையும் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து சக்கர நாற்காலி மற்றும் ஸ்ட்க்சரில் நீதிமன்ற அறைக்கு அழைத்து செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நண்பர்கள் செய்த வெறிச்செயல்- கோவையில் கொடூரம்…

கோவை: கோவையில் தனியார் கல்லூரி மாணவனை சக மாணவர்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் தனது மகனின் இந்த நிலைக்கு காரணம் கல்லூரி நிர்வாகம் தான் என்று பெற்றோர்கள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.