கோவையில் வாகன விபத்தில் கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

கோவை: கோவையில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் விபத்திற்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் கோவை குறிச்சி பகுதியில் சேர்ந்த சூரிய நாராயணன். இவரது நண்பர் திருநெல்வேலியைச் சேர்ந்த சைலெஸ் விஸ்வநாதன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் பாலக்காடு செல்லும் சாலையில் மதுக்கரை ராணுவ முகாம் அருகே சென்று கொண்டு இருந்தனர்.

இருசக்கர வாகனத்தை சைலேஷ் விஸ்வநாதன் ஓட்டியுள்ளார். பின் இருக்கையில் சூரிய நாராயணன் அமர்ந்திருந்துள்ளார். இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் கவிழ்ந்தது இதில் கல்லூரி மாணவர்கள் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதைப் பார்த்த அந்த சாலையில் சென்றவர்கள் இதுகுறித்து மதுக்கரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் கல்லூரி மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விபத்து காரண காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருசக்கர வாகன விபத்தில் அதில் சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.