கோவையில் பெண் காரில் கடத்தலா? சிசிடிவி காட்சிகள் உள்ளே!

கோவை: இருகூர் பகுதியில் இளம் பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றதாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கோவை விமான நிலையம் பின்புறம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவியை மூன்று பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து தமிழக – கேரளா எல்லையான வாளையார் பகுதியில் இளம்பெண்ணை மிரட்டி பணம், நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த சம்பவத்தில் காவல்துறை அதிகாரியின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, நேற்று இரவு இருகூர் தீபம் நகர் பகுதியில் சென்று கொண்டு இருந்த பெண் ஒருவரை வெள்ளை நிற காரில் வந்த நபர்கள் வலுக்கட்டாயமாக இழுத்து காரில் ஏற்றி சென்றதை அங்கு இருந்தவர்கள் பார்த்து உள்ளனர்.

Advertisement

மேலும் இது குறித்து சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் பெண் கடத்தப்பட்டாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? யார் அந்த இளம் ? அந்தக் கார் எங்கு சென்றது என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் காரில் இருந்த பெண் அலறும் சத்தம் கேட்கிறது பின்னர் வேகமாக அந்த காரை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

Advertisement

இதனால் அப்பகுதியில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

இந்த அரசு கருணை காட்டாது- அமைச்சர் அருண்ராஜ் குறிபிட்ட விஷயம்…

கோவை: உறுப்பு மாற்று சிகிச்சையில் தவறு செய்தால் இந்த அரசு கருணை காட்டாது என நாமக்கல் கிட்னி திருட்டை குறிபிட்டு அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...