கோவை: திருச்சி சிவா எம்பி மீது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அஅலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
அண்மையில் திமுக எம்பி திருச்சி சிவா காமராசர் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் திமுக எம்பி திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் யுவராஜ் தலைமையில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் பத்திற்கும் மேற்பட்டவர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இது குறித்து பேட்டியளித்த யுவராஜ் திருச்சி சிவா கூறிய கருத்தை அவரது கருத்தாக பார்க்க முடியாது என்றும் திமுகவின் கருத்தாகவே பார்க்க முடியும் என தெரிவித்தார்.
மேலும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர் காமராஜர் என்பவர் உணர்வு என்றும் அவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திருச்சி சிவா பேசிருக்கும் நிலையில கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை அன்றைய தினமே விட்டுவிட வேண்டும் என பேசுவது ஏற்புடையதல்ல என கூறினார். திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் யாரும் மக்களுக்கான பிரச்சினைகள் குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிப்பதில்லை எனவு. தெரிவித்தார்.