கோவையில் டெங்கு தடுப்பு பணிகள்- 1200 பணியாளர்கள்..

கோவை: கோவையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிர படுத்த 1,200 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கோவையில், வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் காலநிலை திடீர் மாற்றத்தால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பலரும் காய்ச்சல், சளி இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கோவையில் பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் டெங்கு கொசு உருவாகும் அபாயம் உள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்பு அறிகுறிகள் உடன் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்ட அளவில் தினமும் இரண்டு அல்லது மூன்று பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பருவமழை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக ஆங்காங்கே டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த உள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளுக்காக 1200 ஊழியர்கள் நியக்கப்பட உள்ளனர்.

மேலும் நடமாடும் மருத்துவக் குழுவும் தயாராக உள்ளது எனவும், வீடுகளில் மழைநீர் தேங்கும் வகையிலான பழைய டயர், தேங்காய் தொட்டி உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும், மேல்நிலை நீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும், காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கி அனுமதிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.