ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா… வீடியோ காட்சிகள்!

கோவை: கோவை செம்மொழிப் பூங்காவை நாளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கும் நிலையில், மின்னொளி அலங்காரத்தில் செம்மொழிப் பூங்கா ஜொலிக்கிறது.

காந்திபுரத்தில் ரூ.208.5 கோடி செலவில், 45 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது ஒரு நவீன மற்றும் கலாச்சார அடையாள பூங்காவாக உருவாக்கப்பட்டுள்ளது. செம்மொழி பூங்காவில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடும்பங்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் பன்முக வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன .

மேலும், மூலிகைத் தோட்டங்கள், நீரூற்றுகள், மலைக் குன்றுகள், உணவகங்கள், படிப்பகங்கள், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பகுதிகள் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இத்துடன், நடைபாதைகள், அமர்விடங்கள், பார்வையாளர்கள் ஓய்வு எடுக்க இடங்கள், பசுமை நிலப்பரப்புகள் ஆகியவை அனைத்தும் சுற்றுச்சூழல் புதுப்பிப்பு நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்டு உள்ளன.

Advertisement

இந்த பூங்காவை நாளை காலை 11 மணிக்கு ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனை முன்னிட்டு மின் விளக்குகளால் பூங்கா வளாகம் அழகுபடுத்தப்பட்டு பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பெங்களூர் டூ கோவைக்கு புகையிலை கடத்தல்- இருவர் கைது…

கோவை: பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்திய 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யபட்டு வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்திய 450 கிலோ புகையிலை...

Latest News Coimbatore

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...