Header Top Ad
Header Top Ad

கோவை வந்த தோனி- உற்சாகமாக வரவேற்ற மக்கள்…

கோவை: கோவை வந்த எம்.எஸ்.தோனிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisement

விமானம் மூலம் கோவை வந்தடைந்த கிரிக்கெட் வீரர் தோனியை மக்கள் உற்சாக முழக்கங்களுடன் வரவேற்றனர்.

கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அப்பொழுது கோவை விமான நிலையத்தில் இருந்த மக்கள் பலரும் தோனியை பார்த்தவுடன் மாஹி, தல, என்று உற்சாக முழக்கத்துடன் வரவேற்றனர்.

Advertisement

தொடர்ந்து அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு மக்கள் முந்தி அடித்துச் சென்றனர். ஆனால் காவல்துறையினர் தோனிக்கு பாதுகாப்பு வழங்கியதை அடுத்து காரில் புறப்பட்டுச் சென்றார்.

Recent News