பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்கு இதனை செய்யுங்கள்- விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

கோவை: தண்டுதுளைப்பான், புகையான், இளைச்சுருட்டுப்புழு உள்ளிட்ட பூச்சி தாக்குதலில் இருந்து பாதுக்காக்க என்னென்ன செய்ய வேண்டுமென மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில், மாறிவரும் தட்பவெட்பநிலை காரணமாக, கோவை மாவட்டத்தில் ஆனைமலை மற்றும் தொண்டாமுத்தூர் வட்டாரங்களில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரில், ஒரு சில இடங்களில் தண்டுத்துளைப்பான், புகையான் மற்றும் இலைச்சுருட்டுப்புழு தாக்குதல் தென்படுகிறது.

Advertisement

தண்டுத்துளைப்பான் தாக்குதலில் இளம் பயிர் நடுக்குருத்து வாடிக் காய்ந்து விடும். நெல்மணிகள் பால் பிடிக்காமல் பதராகி வெண்கதிர்களாக காணப்படும். இலைச்சுருட்டுப்புழுக்கள் நெற்பயிரின் இலைகளை ஒன்றிணைத்து பச்சையத்தை சுரண்டி வெண்மையாக காணப்படும். புகையான் தாக்கிய பயிர்களில் காய்ந்து பயிர் தீய்ந்தது போன்ற அறிகுறிகள் தென்படும்.

எனவே, விவசாயிகள் தங்கள் நெல் வயல்களில் இந்த அறிகுறிகள் காணப்பட்டால், வட்டார வேளாண் அலுவர்களை தொடர்பு கொண்டு உடனடியாக பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். தண்டுத்துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்திட ஏக்கருக்கு புளுபெண்டியமைடு 20% WG 50 கிராம் (அல்லது) கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 50% SP 400 கிராம் என்ற அளவிலும், புகையான் தாக்குதல்களை கட்டுப்படுத்திட ஏக்கருக்கு பைமெட்ரோசின் 50% WG 120 கிராம் குளோதையானிடின் 50% WG 8-9.6 கிராம், டினோடிபியூரான் 20% SG 60-80 கிராம் மற்றும் பிப்ரோனில் 5% SC 400 மில்லி என்ற அளவிலும், நெல் இலைச்சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு புளுபென்டியமைடு 20% WG 50 கிராம் (அல்லது) புளுபென்டியமைடு 20% W/W SC 20 மிலி (அல்லது) கார்டாப்ஹைட்ரோகுளோரடு 50% SP 400 கிராம் (அல்லது) குளோரான்ட்ரனிலிபுரோல் 18.5% SC 60 மிலி என்ற அளவிலும், வயல்களில் பாசி படர்ந்திருந்தால் ஏக்கருக்கு ஒரு கிலோ காப்பர் சல்பேட்டினை 20 கிலோ மணலுடன் கலந்து தண்ணீர் பாயக்கூடிய 10 இடங்களில் பைகளில் கட்டி வைக்கவும் ஏக்கருக்கு 1 கிலோ 19:19:19 காம்ப்ளக்ஸ் ரத்தை இலை வழியாகத் தெளித்து பயிர் வளர்ச்சியை மேம்படுத்திடவும் விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement

மேலும், நெல் சாகுபடி பரப்பு அதிகமாக உள்ள ஆனைமலை, தொண்டாமுத்தூர் வட்டார விவசாயிகள் வயல் வரப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பசுந்தாள் உரப்பயிர்கள் பயன்படுத்தவும், யூரியா, டிஎபி போன்ற உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே பயன்படுத்தவும் நெல் சாகுபடியை தொடர்ச்சியாக மேற்கொள்வதை தவிர்த்து பயிர்சுழற்சி மேற்கொள்ள வேண்டும்.

எனவே, விவசாயிகள் தங்கள் வயல்களில் பூச்சி நோய் தாக்குதல் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மேற்கண்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Recent News

எந்த கடவுளும் இதனை கூறவில்லை- கோவையில் துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group