எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும்- கோவையில் காங்கிரஸ் புகார்

கோவை: எடப்பாடி பழனிச்சாமி மீது கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

செல்வப்பெருந்தகை குறித்து அவதூறுவதாக பரப்புரையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர் காங்கிரஸ் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்

Advertisement

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான செல்வப் பெருந்தகை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுமென்று தரகுறைவான வார்த்தைகளை பயன்படுத்தி கடந்த 24-ம் தேதி அன்று ஊட்டியில் நடைபெற்ற பரப்புரையில்
பேசி உள்ளார்.

மேலும் பொதுமக்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி வேண்டுமென்று அவதூறு மற்றும் அருவருக்கத்தக்க வகையில் பேசி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை கெடுக்க வேண்டும் வகையிலும் கெட்ட எண்ணத்திலும் மற்றும் தனிமனித தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கு வேண்டும் எனவும் பரப்புரை மற்றும் சுற்றுப்பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோவை மாநகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் சரவணகுமார்,காய்தரி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டாக கோவை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Advertisement

Recent News

Video

Join WhatsApp