கோவை: ராட்சத பலூனில் பறந்து தேர்தல் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் மாவட்ட ஆட்சியர்.
100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூனில் பாரா ரைடிங் செய்த கோவை மாவட்ட ஆட்சியர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக L&T பைபாஸ் சாலையில் உள்ள செட்டிபாளையம் ஜல்லிக்கட்டு மைதானத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்-2026ஐ முன்னிட்டு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து
(பாரா ரைடிங்) ராட்சச பலூன் மூலம் நடத்தப்படும் விழிப்புணர்வு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அப்போது, மாவட்ட ஆட்சியரும் பாரா ரைடிங் செய்து அசத்தினார். மேலும் இந்த நிகழ்வில் நூறு சதவிகித ஓட்டு என்ற வடிவில் நின்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

