பொள்ளாச்சியில் ஆவணங்கள் இருந்தும் பணம் பறிமுதல்; வியாபாரி குமுறல் – வீடியோ

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில் உரிய ஆவணத்துடன் கொண்டு வந்த 70 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்ததாக மீன் வியாபாரி குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவரும் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது வாகனத்தில் இருந்தவர்களிடம் இருந்து 70 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பணத்திற்கான ஆவணங்கள் இருந்ததாகவும், கேரளாவில் மீன்களை விற்று அதற்கான ஆவணங்களை பெற்று அந்த பணத்தை வேளாங்கண்ணிக்கு கொண்டு செல்வதாக தேர்தல் பறக்கும் படையினரிடம் வியாபாரிகள் தெரிவித்தும் பணத்தை பறிமுதல் செய்துள்ளதாக மீன் வியாபாரி குற்றம் சாட்டினார்.

Advertisement

அந்த வீடியோ காட்சிகள்

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை வரும் துணை ஜனாதிபதி- ட்ரோன் பறக்க தடை…

கோவை: துணை குடியரசு தலைவர் வருகையால் கோவையில் மூன்று தினங்களுக்கு ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் திருப்பூர் செல்வதற்காக துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை வருகை புரிய உள்ளதை முன்னிட்டு...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...