கோவையில் மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழப்பு

கோவை: தொண்டாமுத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவது தொடர் கதையாக உள்ளது.

Advertisement

இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 25 வயது ஒற்றை ஆண் காட்டு யானை தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம், ராமன் குட்டை என்ற பகுதியில் உள்ள நாகராஜன் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்தது. அப்போது அதிகாலையில் தோட்டத்தில் மின்வாரியத்தால் அமைக்கப்பட்ட உயர் மின் அழுத்த கம்பத்தை யானை முட்டித் தள்ளியது.

இதில் கீழே விழுந்த உயர் மின்னழுத்த மின் கம்பி பட்டதில், மின்சாரம் பாய்ந்து காட்டு யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்து விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் என்ற காட்டு யானை பிடிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் வனபகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, விவசாய நிலத்திற்குள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Recent News

Video

Join WhatsApp