கோவை அரசு கலைக்கல்லூரியில் நிறைவடைந்த கலைத்திருவிழா

கோவை: கோவை அரசு கலைக் கல்லூரியில் கலை திருவிழா நிறைவடைந்தது.

கோவை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற கலை திருவிழாவின் இறுதி நாளான இன்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கோவை அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி கலை திருவிழா இரண்டு வாரங்களாக நடைபெற்றது. இதில் நடனம், கவிதை போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி, பட்டிமன்றம், செயற்கை நாடகம், பாரம்பரிய கலை நிகழ்ச்சி போட்டிகள் ஆகியவை ஒவ்வொரு நாளும் நடைபெற்றது.

இறுதி நாளான இன்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இறுதி நாளான இன்றும் நடனம், நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் அரசு கலைக் கல்லூரி முதல்வர் எழிலி, கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Recent News

Video

தடாகம் அருகே அரிசியை ருசிபார்த்த யானை- அதிர்ச்சி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து வீட்டில் வைத்திருந்த அரிசியை காட்டு யானை தின்று செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், வரபாளையம், தாளியூர்,...
Join WhatsApp