கோவை: கோவை அருகே உடலில் காயங்களுடன் சுற்றித்திரிந்த மக்னா யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கோவை மாவட்டம் தமிழ்நாடு கேரளா எல்லை பகுதியில் மக்னா யானை ஒன்று உடலில் காயங்களுடன் சுற்றி திரிந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெரியநாயக்கன்பாளையம் வன சரகத்திற்கு உட்பட்ட ஆனைகட்டி அடுத்த கூடபட்டி என்ற இடத்தில் அந்த யானை ஆற்றில் நின்று கொண்டிருந்த நிலையில் வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.
அந்த யானை கரையேறியவுடன் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் பழங்கள் மூலம் மருந்து வைக்கும் காயங்களுக்கு மருந்துகள் தெளித்தும் சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தனர்.
சுமார் பத்து நாட்களாக யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனை அடுத்து இன்று உடற்கூறு ஆய்வு செய்வதற்கு வனத்துறை அதிகாரிகள் முடிவு எடுத்து அதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
10 நாட்களாக சிகிச்சை அளித்து வந்த யானை உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.