ரத்தினபுரியில் தீ விபத்து…

கோவை: ரத்தினபுரி பகுதியில் கார் ஒர்க் ஷாப்பில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

கோவை சிவானந்தாகாலனி, ரத்தினபுரி பகுதி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும் அதிகமான குடியிருப்புகள் நெருக்க நெருக்கமாக அமைந்துள்ள பகுதியாகும்.

இந்நிலையில் இரத்தினபுரி புதுபாலம் அருகில் உள்ள தனியார் கார் ஒர்க் ஷாப்பில் திடீரென தீப்பிடித்துள்ளது. உடனடியாக அங்கு பணிபுரிந்தவர்கள் தீயை அணைக்க முற்பட்ட நிலையில் தீ வேகமாக பரவியதால் பணியாளர்கள் உடனடியாக வெளியேறி உள்ளனர். தீயானது மளமளவென பரவிய நிலையில் ஒர்க் ஷாப்பில் இருந்த நான்கைந்து கார்கள் தீயில் சேதமடைந்தன. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்று தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயணைப்பு துறையினர் செல்வதற்குள் தீயால் ஏற்பட்ட கரும்புகை அருகில் இருந்த கடைகளையும் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அங்கிருந்தவர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து ரத்தினபுரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp