கோவையில் தொடங்கப்பட்டது மிதக்கும் சோலார் நிலையம்!

கோவை: உக்கடத்தில் ரூ.1.45 கோடி மதிப்பில் மிதக்கும் சோலார் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

உக்கடம் பெரியகுளத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 13.7 சென்ட் நீர்ப்பரப்பில் ரூ.1.45 கோடி மதிப்பில் சோலார் தகடுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இந்த திட்டத்திற்கு சுவிட்சர்லாந்து தூதரகம் ரூ.72.50 லட்சமும், தமிழ்நாடு அரசு ரூ.72.50 லட்சமும் வழங்கியுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் பெரியகுளத்தில் 280 சோலார் தகடுகள் தண்ணீரில் மிதக்கவிடப்பட்டுள்லன. இந்த சோலார் தகடுகள் மூலம் 693 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

இங்கு உற்பத்தியாகும் மின்சாரம், மின்வாரியத்துக்கு வழங்கப்பட உள்ளது. மாநகராட்சி பயன்படுத்தும் மின்சார யூனிட்களில் இருந்து இந்த மின் அளவு கழித்துக் கொள்ளப்படுகிறது.

இந்த சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தில் சிசிடிவி கேமிராக்கள், இடித் தாங்கி, மின் விளக்குகள், தீயணைப்பு கருவிகள், பாதுகாப்பு கம்பிவேலி, தானியங்கி தகடு சுத்தம் செய்யும் நீர்த் தெளிப்பான் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சோலார் நிலையத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.