ஒண்டிப்புதூர் மாணவன் கொலை வழக்கில் தீர்ப்பு!

கோவை: ஒண்டிப்புதூர் மாணவன் கொலை வழக்கில் சிறுவனுக்கு தண்டனை வழங்கியுள்ளது கோவை நீதிமன்றம்.

கோவை ஒண்டிப்புதூர் நஞ்சப்பா தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(68). லேத் பட்டறை நடத்தி வருகிறார்.

இவரது மகன் பிரணவ்(17). இவர் கடந்த 2024ம் ஆண்டு சின்னவேடம்பட்டியில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது பிரணவ் மற்றும் ஒரு மாணவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

Advertisement

இது அதே பள்ளியில் படிக்கும் மாணவியின் 17 வயதான சகோதரனுக்கு தெரியவந்தது. அடிக்கடி பிரணவ் மற்றும் மாணவி சகோதரர் மோதிக் கொண்டனர்.

இந்நிலையில், கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி காலையில் ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பேக்கரி முன்பு பிரணவ்வை, அந்த மாணவியின் சகோதரர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார்.

இந்த சம்பவம் கோவை மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்பட்டுத்தியது.

Advertisement

இது குறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை சிறார் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அருண் ராஜ்குமார், கொலை வழக்கில் 17 வயது சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ஜெ., ஆத்மா இபிஎஸ்க்கு தண்டனை கொடுத்துள்ளது: கோவையில் செங்கோட்டையன் பேட்டி!

ஜெயலலிதா ஆத்மாதான் எடப்பாடி பழனிசாமிக்கு தண்டனை கொடுத்துள்ளது என்று கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video

கோவையில் சிக்கன் கடையில் வாலிபர் கைவரிசை- சிசிடிவி காட்சிகள் வெளியீடு…

கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3,500-ஐ வாலிபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.