கோவை போக்குவரத்து போலீசாருக்கு குளுகுளு ஏ.சி தொப்பி!

கோவை: கோவையில் கடும் வெயிலில் படாதபாடுபடும் போக்குவரத்து காவலர்களுக்கு ஏ.சி தலைக்கவசங்களிய வழங்கியுள்ளார் மாநகர காவல் ஆணையர்.

கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் முதல்கட்டமாக 36 போக்குவரத்து காவலர்களுக்கு AC தலைக்கவசங்களை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் வழங்கினார்.

Advertisement

இந்த தலைக்கவசத்தின் விலை 15 ஆயிரம் ரூபாய் என்றும், இதனை 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் இரண்டு மணி நேரம் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 5 டிகிரி வெப்பநிலையை குறைக்கும் தன்மை கொண்டது.

இந்த நிகழ்வில், செய்தியாளர்களுக்கு அளித்த காவல் ஆணையாளர் சரவணசுந்தர், “இந்த தலைகவசம் வெயில் காலத்தில் போக்குவரத்து காவலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெள்ளலூர் பகுதியில் புதிதாக கட்டி வரக்கூடிய பேருந்து நிலையம் அருகே கடந்த 11ம் தேதி கை, கால்கள் கட்டப்பட்டு ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக நான்கு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.” என்றார்.

Advertisement

Recent News