கோவையில் தங்கக்கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்- உரிமையாளரின் கார் கண்டுபிடிப்பு

கோவை: லாரியை குறுக்கே நிறுத்தி காரை வழிமறித்து நகை வியாபாரியிடம் ரூபாய் 1.25 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் கொள்ளை அடித்த வழக்கில் உரிமையாளரின் கார் கேரளாவில் மீட்பு …

கோவையில் நகை வியாபாரி சென்ற காரை லாரியை கொண்டு வழிமறித்து ரூபாய் 1.25 கோடி தங்க கட்டிகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஐந்து பேர் கொண்ட கும்பலை 5 தனிப்படை போலீசார் வலை வீசி தேடி வந்த நிலையில் கடத்திச் செல்லப்பட்ட நகைக்கடை உரிமையாளரின் கார் கேரள மாநிலம் வழுக்கல் பகுதியில் பணிப்படை போலீசார் மீட்டு உள்ளனர்.

கேரள மாநிலம், திருச்சூர் அருகே உள்ள பாலக்கல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சன் ஜேக்கப் நகை வியாபாரியான, இவர் அந்தப் பகுதியில் நகை பட்டறை மற்றும் நகைக்கடை வைத்து உள்ளார்.

இவர் வழக்கமாக சென்னை சென்று அங்கு உள்ள நகைக் கடைகளில் இருந்து தங்கக் கட்டிகளை வாங்கி வந்து. அவற்றை நகையாக செய்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி ஜெய்சன் ஜேக்கப் தனது கடையில் வேலை செய்து வரும் ஊழியர் விஷ்ணுவுடன் சொகுசு காரில் கோவை வந்தார். அவர்கள் சென்னை சென்று நகைக் கடைகளில் 1.25 கிலோ தங்க கட்டிகளை வாங்கி விட்டு ரயில் மூலம் கோவை திரும்பினர்.

பிறகு ஜெய்சன் ஜேக்கப் 14ம் தேதி தனது கார் மூலம் திருச்சூர் புறப்பட்டார். காரை விஷ்ணு ஓட்டினார். அவர்கள் கோவை பாலக்காட்டு சாலையில் எட்டிமடையை தாண்டி சென்று கொண்டு இருந்தனர். அங்கு உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத, பகுதியில் சென்ற போது திடீரென பின்னால் வந்த லாரி ஒன்று ஜெய்சன் ஜேக்கப் சென்ற காரில் முன் பகுதியில் குறுக்காக நின்று வழி மதித்து நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஷ்ணு பிரேக் பிடித்து காரை நிறுத்தினார்.

அப்பொழுது லாரியில் இருந்து ஐந்து பேர் கொண்ட கும்பல் குதித்து ஜெய்சன் ஜேக்கப் காரை சூழ்ந்தது. அந்த கும்பல் கத்தி, இரும்பு கம்பி ஆகியவற்றை உதவியுடன் கார் கண்ணாடியை உடைத்தது. இதனால் காரில் இருந்த ஜெய்சன் ஜேக்கப் அச்சம் அடைந்தார். அவர் பயத்தில் அலறினார். பின்னர் அந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அந்த காரில் ஏறிக்கொண்டது.

ஜெய்சன் ஜேக்கப் கழுத்தில் கத்தியை வைத்து அந்த கும்பல் அவரிடம் இருந்து 1.25 கிலோ தங்க கட்டிகளை எங்களிடம் கொடுத்து விடவில்லை என்றால் கத்தியால் குத்தி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியது. இதனால் பயந்து போன அவர் காரின் இருக்கையில் அடியில் வைத்து இருந்த தங்க கட்டிகளை எடுத்து அந்த கும்பலிடம் கொடுத்தார். இதை அடுத்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்ற பின்னர் ஜெய்சன் ஜேக்கப், விஷ்ணு ஆகியோரை தாக்கியதுடன், ஜெயிசன் ஜேக்கப் கையில் இருந்த ரூபாயை பறித்து விட்டு காரை நிறுத்தினர். பின்னர் காரில் இருந்து இரண்டு பேரையும் பிடித்து கீழே தள்ளி விட்டு, அந்த கும்பல் காருடன் அங்கு இருந்து வேகமாக தப்பிச் சென்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இரண்டு பேரும் செய்வது அறியாமல் திகைத்தனர். இதுகுறித்து க.க.சாவடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் தங்கக் கட்டிகளை பறிகொடுத்த ஜெய்சன் ஜேக்கப் மற்றும் விஷ்ணு ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். கொள்ளை அடிக்கப்பட்ட தங்க கட்டிகள் சுத்தமான 24 கேரட் தங்கம் ஆகும். எனவே அதன் மதிப்பு ரூபாய் 1 1/4 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதில் லாரியில் இருந்து இறங்கி தங்க கட்டிகளை கொள்ளை அடித்த காருடன் தப்பிச் சென்ற கும்பல் மலையாள மொழியில் பேசி உள்ளனர். எனவே அவர்கள் கேரளாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிவித்த காவல்துறையினர், எனவே இது தொடர்பாக காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில். அத்துடன் அந்த கும்பலை பிடித்து ஐந்து தனி படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.

நகை கடை உரிமையாளரின் கார் கேரளா மாநிலம் வழுக்கல் பகுதியில் தனிப்படை போலீசார் மீட்டு உள்ளனர். மேலும் மர்ம கும்பலை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை காவல் துறையினர் கேரளாவில் முகமிட்டு தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.