கோவை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,120 விலை அதிகரித்த நிலையில், இன்று மீண்டும் அதிரடி விலை உயர்வைச் சந்தித்தது.
நாளுக்கு நாள் தங்கம் விலை அதிகரித்து வரும் நிலையில், நேற்று காலை ஒரு பவுன் (22 காரட்) தங்கம் விலை ரூ.560 உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று மதியமே மீண்டும் ரூ.560 விலை உயர்வைச் சந்தித்தது.
நேற்று ஒரு நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,120 விலை அதிகரித்து, ஒரு பவுன் ரூ.83,440க்கு விற்பனையானது.
இதனிடையே இன்று தங்கம் விலை பவுனுக்கு மீண்டும் ரூ.560 உயர்ந்து பவுன் ரூ.84,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை (22 காரட்):
ஒரு கிராம் – ரூ.10,500
ஒரு பவுன் – ரூ.84,000
தங்கம் விலை (18 காரட்):
ஒரு கிராம் – ரூ.8,700
ஒரு பவுன் – ரூ.69,600
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து, வரலாற்றில் இதுவரை இல்லாத விலையில் விற்பனையாகி வருகிறது. நேற்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது.
வெள்ளி விலை:
ஒரு கிராம் – ரூ.149
ஒரு கிலோ – ரூ.1,49,000