Gold Rate Today: தங்கம் விலை நேற்று சரிந்த நிலையில், இன்று விலை உயர்வைச் சந்தித்துள்ளது.
கோவையில் நேற்று காலை ஒரு பவுன் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,200 குறைந்தது. மீண்டும் பிறபகலில் ரூ.1,800 குறைந்தது.
தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை, நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,000 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.11,075க்கும், பவுன் ரூ.88,600க்கும் விற்பனையானது.
இதனிடையே இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,080 அதிகரித்துள்ளது.
கோவையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.135ம், பவுனுக்கு ரூ.1,080ம் அதிகரித்து, தற்போது ஒரு கிராம் ரூ.11,210க்கும், ஒரு பவுன் ரூ.89,680க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
18 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150ம், பவுனுக்கு ரூ.1,200ம் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.9,350க்கும், ஒரு பவுன் ரூ.74,800க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்துள்ளது . இன்று ஒரு கிராம் ரூ.166க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,66,000க்கும் விற்பனையாகிறது.




