இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கோவை: கோவை உட்பட 6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த வாரம் கொட்டித் தீர்த்த கனமழை தற்போது சற்றே ஓய்ந்துள்ளது. நேற்று மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

மாநகரப் பகுதிகளில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் மழை காணப்படவில்லை.

இதனிடையே கோவை உட்பட 6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, கோவை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,

திருநெல்வேலி, தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent News

Video

தடாகம் அருகே அரிசியை ருசிபார்த்த யானை- அதிர்ச்சி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து வீட்டில் வைத்திருந்த அரிசியை காட்டு யானை தின்று செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், வரபாளையம், தாளியூர்,...
Join WhatsApp