கோவையில் மீண்டும் நடைபெற்ற Happy Street…

கோவை: கோவையில் களைகட்டிய ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியில் இளைஞர்கள் உற்சாகமாக பங்கேற்று மகிழ்ந்தனர்.

கோவையில் மீண்டும் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி களைகட்டியது. இதில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பாடல்களுக்கு ஏற்றவாறு உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி இன்று கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் நடைபெற்றது.

இதில் சினிமா பாடல்கள் மட்டும் இல்லாமல், நம் பாரம்பரிய நடனம், பாட்டும் பங்கேற்ற பலர் பாடி உற்சாகம் பெற்றனர்.

அந்த சாலையில், விளையாட்டுக்கள் மட்டுமின்றி தற்காப்பு கலைகளான கராத்தே போன்ற உடற்பயிற்சிகளும் அளிக்கப்பட்டதுடன், மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Recent News

Video

Join WhatsApp