கோவையில் கட்டுக்கட்டாய் சிக்கிய ஹவாலா பணம்! போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை!

கோவை: கோவை அருகே இருசக்கர வாகனத்தில் பணம் கடத்திய இருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்பட்ட 26.4 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் கோவை க.க.சாவடி பகுதியில் காவல்துறையினரின் வாகன தணிக்கையில் கைப்பற்றப்பட்டு உள்ளது. மேலும் இரு சக்கர வாகனத்தில் பணம் கடத்திய இருவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

சேலம் -கொச்சி தேசிய நெடுஞ்சாலை கோவை க.க.சாவடி அடுத்த எல்லை மாகாளியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டு உள்ள காவல் துறை சோதனை சாவடி பகுதியில் இன்று காலை மதுக்கரை நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட நிலையில் கோவையில் இருந்து கேரளாவிற்கு இருசக்கர வாகனம் மூலம் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்து உள்ளது.

இதை அடுத்து கேரளா நோக்கிச் சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் எந்த வித ஆவணங்களும் இன்றி 26 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கவரிங் வளையல்கள் ஆகியவை கொண்டு கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

இதை அடுத்து அவற்றை கொண்டு சென்றவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த அப்துல் ஹக்கீம் மற்றும் அப்துல் ரகுமான் என தெரிய வந்தது.

மேலும் பணம் குறித்த உரிய தகவல்களை கூறாமல் முன்னுக்கு பின் முரணாக அவர்கள் பதில் அளித்ததால் இருவரையும் க.க.சாவடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

இது தான் கோவை தலைமை மருத்துவமனையை நடத்தும் லட்சணமா?

கோவை: அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலிக்காக சிகிச்சை பெறச் சென்ற பெண் நோயாளிக்கு உரிய வசதிகள் வழங்கப்படவில்லை என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி, அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில்...

Latest News Coimbatore

Video

இது தான் கோவை தலைமை மருத்துவமனையை நடத்தும் லட்சணமா?

கோவை: அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலிக்காக சிகிச்சை பெறச் சென்ற பெண் நோயாளிக்கு உரிய வசதிகள் வழங்கப்படவில்லை என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி, அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில்...