Header Top Ad
Header Top Ad

கோவையில் லெக் பீஸ் வைக்காத ஹோட்டலுக்கு ரூ.10,000 அபராதம்!

கோவை: கோவையில பிரியாணி கடையில் லெக் பீஸ் வைக்கவில்லை என்று கூறிய வாடிக்கையாளனுடன் தகராறு செய்த ஹோட்டல் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கிரிஸ்டோபர். இவர் கடந்த ஜனவரி மாதம் அந்த பகுதியில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான பிரியாணி கடைக்கு குடும்பத்துடன் சாப்பிட சென்றார்.

அங்கே சாப்பிடுவதற்காக கிறிஸ்டோபர் முழு கோழி ஆர்டர் செய்துள்ளார். அப்போது அவருக்கு வைக்கப்பட்ட கோழியில் லெக் பீஸ் இல்லை. இது குறித்து கிறிஸ்டோபர் கடை ஊழியர்களிடம் கேட்டுள்ளார். இது தொடர்பாக கடை ஊழியர்களுக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கிறிஸ்டோபருக்கு லெக் பீஸ் வைக்கப்பட்டது.

லெக் பீஸ் வைக்காதது தொடர்பாக ஏற்பட்ட தகராறால் மன வேதனை அடைந்த கிறிஸ்டோபர் இதுகுறித்து கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேலு, கடை உரிமையாளரான மணிகண்டன் ரூ. 10 ஆயிரம் இழப்பீடு மற்றும் கோர்ட்டு செலவு ரூ.5000 ஐ கிரிஸ்டோபருக்கு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

Advertisement

Hotel in Coimbatore fined Rs. 10,000 for not provide leg piece

Recent News