கோவையில் வீட்டுக்கழிவுகள் சேமிப்பு முகாம்- தேதி அறிவிப்பு- பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?

கோவை: கோவையில் வீட்டுக்கழிவுகள் சேமிப்பு முகாம் நடைபெற உள்ளது.

பெரிய அளவிலான வீட்டுக்கழிவுகள் சேகரிப்பு முகாம் கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் வீடுகளில் உள்ள பழைய மெத்தை, சோபா, மேஜை, நாற்காலி போன்ற பெரிய அளவிலான கழிவுகளைச் சேகரிக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஜனவரி 10, 11, 12 மற்றும் 13 ஆகிய நான்கு நாட்கள் இந்த முகாம் நடைபெற உள்ளதாகவும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பெரிய கழிவுகளை அந்தந்த வார்டுகளில் அறிவிக்கப்பட்டுள்ள சேகரிப்பு மையங்களில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான மையங்கள் வார்டு அலுவலகங்கள் மற்றும் மண்டல அலுவலகங்கள் சேகரிப்பு மையங்களாகச் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கழிவுகளைச் சாலை ஓரங்களிலோ அல்லது காலி இடங்களிலோ கொட்டுவதைத் தவிர்த்து, முறையாக அப்புறப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த முகாம் நடைபெறுகிறது.

தொடர்பு எண்கள் (மண்டல வாரியாக):
உதவி மற்றும் கூடுதல் தகவல்களுக்குக் கீழ்க்கண்ட எண்களை அழைக்கலாம்,

| மண்டலம் | தொடர்பு எண் |
| வடக்கு (North) | 89259 75980 |
| மேற்கு (West) | 89259 75981 |
| மத்திய (Central) | 89259 75982 |
| தெற்கு (South) | 90430 66114 |
| கிழக்கு (East) | 89258 40945 |
இணையதளம்: www.ccmc.gov.in ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp