கோவை: புதுமைகளின் எதிர்ப்பை HouseMates திரைப்படம் பூர்த்தி செய்யும் என்றும் திரையரங்குகளுக்கு வந்து பார்த்தால் பல்வேறு சர்ப்ரைஸ்கள் இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர் நடிகைகள் தர்ஷன், காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன் ஆஷா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள HouseMates திரைபடம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் கோவை பிராட்வே சினிமாவில் திரைப்படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. இதனை திரைப்பட குழுவினர் பார்வையாளர்களுடன் கண்டுகளித்து திரைப்படம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த படக்குழுவினர்களான, இயக்குநர் ராஜவேல், நடிகர் நடிகைகள் தர்ஷன், ஆஷா, காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் எங்கள் திரைப்படத்திற்கும் திரையரங்குகள் ஹவுஸ்புள்ளாக ஓடும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ட்ரெய்லரில் பார்த்ததைவிட படத்தில் அதிகமான சர்ப்ரைஸ்கள் இருக்கும் என தெரிவித்தனர்.
திரையரங்கிற்கு வந்து இந்த படத்தை முழுமையாக பார்க்கும் பொழுது தான் பல்வேறு சர்ப்ரைஸ்கள் இருக்கும் என்றும் படம் முடிந்த பிறகு நமது வீட்டிலும் இவ்வாறு நடந்தால் எப்படி இருக்கும் என்ற உணர்வு வரும் என பட குழுவினர் கூறினர். தமிழ் சினிமாவிற்கு இந்த படம் ஒரு புதுமையான ஐடியாவாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
கமர்சியலாக மட்டுமே படங்களை எடுத்து வந்தால் நல்ல படங்கள் வராது என்று கூறிய இயக்குநர் தற்போது நல்ல கதைகளுக்கு மக்கள் ஆதரவு அளித்து வருவதால் என்னைப் போன்ற புதுமையான இயக்குனர்கள் கதைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக குறிப்பிட்டார்.
மேலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கும் பொழுது பல்வேறு புதுமையான விஷயங்கள் வெளிவரும் எனவும் தெரிவித்தார். பார்வையாளர்களின் புதுமையான எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யும் எனவும் காமெடி ஹாரர் என்டர்டைன்மென்ட் எமோசன் போன்ற அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.