கோவை: கோவையில் புதன்கிழமை வரை வானிலை நிலவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கோவையில் வரும் ஜூலை மாதம் 2 தேதி வரையிலான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரங்களை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்:-
Advertisement

அதன்படி, கோவையில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று குறைந்தபட்சம் 21 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 31 டிகிரி செல்சியஸ் வரையிலும், நாளை குறைந்தபட்சம் 22 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 32 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.
வரும் 30ம் தேதி முதல் ஜூலை 2ம் தேதி வரை கோவையில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும், இந்த மூன்று நாட்களிலும் குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 32-33 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோவை வானிலை, வானிலை, கோவை மழை, மழைக்கு வாய்ப்பு, Coimbatore weather, weather, Coimbatore rain, chance of rain in Cimbatore,
வானிலை மையம் வழங்கும் அடுத்த Update-ஐ விரைவில் வழங்குகிறோம்.