தகுதித்தேர்வு: கோவை ஆசிரியர்களே கவலைய விடுங்க! பயிற்சி மற்றும் பாடக்குறிப்பிற்கான Link..

கோவை: கோவையில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் 2025ம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி வெளியிட்டது.

Advertisement

இந்த ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தாள்-1 தேர்வு வருகிற 15ம் தேதியும், தாள் – 11 தேர்வு 16ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கான இணைய வழி இலவச பயிற்சி வகுப்பு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் மூலம் வருகிற 5ம் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

எனவே தேர்வுக்கு விண்ணப்பித்து பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியரகள் https://forms.gle/d2MbqVVtgGeKY9ra6 என்ற கூகுள் படிவம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து இலவசமாக பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இப்பயிற்சி வகுப்புகள் தொடர்பான தகவல்களுக்கு 0422-2642388, 9499055937 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Recent News

Video

Join WhatsApp