கோவை: தான் அழைக்கும் போது செல்போனை எடுக்காததால் ஏற்பட்ட பிரச்சினையில் மாற்றுத்திறளாளி மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 46). தொழிலாளி. இவரது மனைவி உமா (40) மாற்றுத்திறளானி. இவர்கள் கோவை சூலூர் அருகே உள்ள சுவாமிநாதன் என்பவருக்கு சொந்தமான தேங்காய் தோட்டத்தில் தங்கியிருந்து வேலைபார்த்து வந்தனர்.
இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 10ம் தேதி இரவு வீட்டில் உள்ள டி.வி.யை ரீசார்ஜ் செய்வதற்காக தர்மராஜ் தனது மனைவி உமாவுக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்தார்.
நீண்டநேரமாக அழைத்தும் மனைவி செல்போனை எடுக்காததால் ஆத்திரத்தில் வீட்டிற்கு வந்த தர்மராஜ் வீட்டிற்கு, உமாவுடன் தகராறு செய்தார்.
இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் தனது மனைவியை பிளாஸ்டிக் குழயால் தாக்கியதுடன், சிமெண்ட் கம்பத்தில் அடித்து கொன்றார். இந்த சம்பவம் குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் 11 பேர் சாட்சியம் அளித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரராஜ், மனைவியை கொன்ற தர்மராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் ரூ.500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் ஜிஷா ஆஜராகி வாதாடினார்.