பாரதியார் இருந்திருந்தால் அழுதிருப்பார்- பாஜகவை சாடிய அமைச்சர் மனோ தங்கராஜ்…

கோவை: பாரதி கூறியது மோடியின் தலைமையில் நடக்கிறதா என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.

கோவை கொடிசியா வளாகத்தில் பால்பொருட்கள் சம்பந்தப்பட்ட கண்காட்சி 3 நாட்கள் நடைபெறுகிறது. இதனை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

Advertisement

இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், இன்றைய தினம் பால்வள் துறையில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் இயந்திரங்கள் உபகரணங்கள் சந்தையில் உள்ளது ஆனால் அது சாதாரண மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தெரிவதில்லை என கூறிய அவர் அவற்றை பற்றி தெரிந்து கொள்ள இந்த கண்காட்சி ஒரு வாய்ப்பு என்றும் இதனை விவசாயிகள், பால் சார்ந்த தொழில் செய்பவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஜி எஸ் டி வரி குறைந்த பிறகும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் அவர்களது பொருட்களின் விலையை குறைக்காமல் இருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ஜிஎஸ்டி என்பதே ஒரு மோசடி, முதலில் பாலுக்கு ஜிஎஸ்டியே கிடையாது அது அதிக பேருக்கு தெரிவதில்லை பெரிய அரசியல் செய்பவர்களுக்கு கூட அந்த உண்மை தெரிவதில்லை என்றார். டாலர் விலை உயர்வும் பெட்ரோல் டீசல் விலையும் தொழில்களை மறைமுகமாக பாதிக்கிறது இதெல்லாம் மோடிக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எப்படி தெரியாமல் இருக்கிறது என்றார்.

தொழில்துறை என்பது ஜிஎஸ்டியை மட்டுமே சார்ந்தது அல்ல என தெரிவித்த அவர் டாலர் மதிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு இவை அனைத்தும் ஈடுகட்டுவது என்பது பெரிய விஷயம் என தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டு காலங்களில் ஆவின் நிறுவனம் பால் பொருட்களுக்கு விலை உயர்வு செய்யவில்லை என்றும், பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தாலும் அனைத்து விலைகளையும் கன்ட்ரோலுடன் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement

இந்தத் துறையில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு மானியங்கள் கடனுதவிகள் வழங்கப்படுவதாகவும், தொழில்நுட்பங்கள் சார்ந்து ஆவின் நிறுவனத்தை நகர்த்தி செல்வதாகவும் ஆவின் வரலாற்றிலேயே முதன்முறையாக விவசாயிகள் துவங்கி உயர் மட்ட அதிகாரிகள் வரை ஒவ்வொருவருக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும் பால்வளத் துறையில் ஆவினில் Damage கள் தற்பொழுது குறைந்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.

அரசியல் தொடர்பான கேள்விக்கு தனியாக செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் பாரதி தற்போது இருந்திருந்தால் பிரதமர் மோடியை புகழ்ந்து பாடி இருப்பார் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு, முதலில் பாரதி என்ன பாடினார் என்பதை படிக்க சொல்லுங்கள், சாதி மதங்களை பார்க்கக் கூடாது, வேதியர் ஆயினும் ஒன்றே வேறு குலத்தவர் ஆயினும் ஒன்றே, என்று பாரதி பாடியுள்ளார், இது மோடியின் தலைமையில் நடக்கிறதா என கேள்வி எழுப்பினார்.

பெண்கள் தம்மை இழிவு படுத்தும் மடமையை கொளுத்துவோம் என்று கூறி இருக்கிறார் பாரதி, ஆனால் நீங்கள்(பாஜக) தர்மம் என்று கூறி பெண்களை வீட்டிலேயே அடக்க பார்க்கிறீர்கள் என விமர்சித்தார். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி கூறினார் ஆனால் இந்த கொடுமைகளை எல்லாம் பாரதி பார்த்தால் பாரதியே அழுது விடுவார், இவர்களை பாராட்டவும் மாட்டார் பாடவும் மாட்டார் என்றார். மேலும் இவர்கள்(பாஜக) என்ன செய்ய வேண்டும் என்று பாரதி ஏற்கனவே பாடி வைத்துள்ளார், முதலில் அவற்றையெல்லாம் தமிழிசை போன்றவர்கள் படித்து மோடியிடம் சொல்ல வேண்டும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மத வேறுபாடு என்ற மடமையே கொளுத்த வேண்டும் என்று பாரதி பாடியுள்ளார் என்றும் பாஜக என்றால் பொய் பொய் என்றால் பாஜக அவர்கள் ஒரு பொய் மூட்டையை உருட்டி விட்டு விட்டார்கள் ஆனால் அந்த பொய் மூட்டை உருளாமல் நின்று விட்டது அது என்வென்றால் திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாக நடைபெறுகின்ற அந்த தீபம் ஏற்றுகின்ற நிகழ்வு முறைப்படி நடைபெற்று விட்டது அதையெல்லாம் மக்கள் பார்த்து விட்டார்கள், ஆனால் பாஜக அரசியல் செய்வதற்கும் ஒரு களம் அமைப்பதற்கும் பிரச்சனை செய்து உள்ளார்கள் என தெரிவித்தார்.

நீதிபதி அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது பற்றிய கேள்விக்கு அதற்குள் நாம் செல்ல வேண்டாம் நாங்கள் கேட்பதெல்லாம் எதற்காக பொய் சொல்ல வேண்டும் என்பதுதான் என பதிலளித்து சென்றார்.

Recent News

ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 15 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல், ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே கோவை மாவட்ட...

Video

கீரணத்தம் வந்த காட்டு யானைகள்; ஆனந்தக் குளியல் போடும் வீடியோ காட்சிகள்!

கோவை: கோவையில் குட்டையில் உற்சாக குளியலாடிய காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை அருகே வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானைகள் ஊருக்குள் உள்ள குட்டையில் உற்சாகமாக குளியல்...
Join WhatsApp