கோவையில் மேற்கு வங்க இளைஞர் மீது வெறிச்செயல்- ஊர்காவல்படை வீரர் உட்பட இருவர் கைது…

கோவை: மேற்கு வங்க தொழிலாளியை அடித்து கொலை ஊர் காவல் படை வீரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் சூரஜ் என்பவர் கோவையில் உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் கரும்புக்கடையில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வந்தார்.

அந்நிலையில் கடந்த 28-ம் தேதி வேலை முடிந்து புல்லுக்காடு பகுதியில் தனது நண்பர் ராகேத் என்பவருடன் நடந்து சென்று கொண்டிருந்த போது , அவ்வழியாக வந்த ஆட்டோ சூரஜ் மீது மோதியுள்ளது. அதில் சூரஜ் கீழே விழுந்தார். உடனே அந்த ஆட்டோவில் இருந்த 2 பேரிடம் சூரஜ் ஏன் இடித்தீர்கள் என்று கேட்டுள்ளார்.

அப்போது ஆட்டோவில் இருந்த இருவரும் சூரஜ்ஜை சரமாரியாக அடித்து தாக்கி விட்டு சென்றனர். இதில் படுகாயம் அடைந்த சூரஜை அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கடைவீதி போலீசார் அடிதடி வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் சூரஜை தாக்கியது உக்கடத்தை சேர்ந்த ஊர் காவல் படை வீரர் முகமதுபஷீத்கான்(30) மற்றும் அவரது நண்பர் பிரகாஷ்(38) என்பது தெரியவந்தது. இருவரிடம் போலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று முன் தினம் சூரஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து போலிசார் அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றியமைத்து இருவரையும் கைது செய்தனர். கைது செய்யபட்ட இருவரிடமும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் சொகுசு காரில் பிடிபட்ட வெளிநாட்டு மதுபானங்கள்- தேர்தல் பறக்கும் படை அதிரடி…

கோவை: கோவையில் சொகுசு காரில் இருந்த வெளிநாட்டு மதுபானங்களை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ​தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை...

Video

தடாகம் பகுதியில் கும்பலாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள்…

கோவை: தடாகம் அருகே வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் கூட்டத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், பன்னிமடை, தாளியூர், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதியில்...