கோவையில் பாட்டு சவுண்டை குறைத்த டிரைவர் அடித்துக் கொ*!

கோவை: கோவையில் பாட்டு சப்தத்தைக் குறைத்த டிரைவர் ஒருவரை சக டிரைவர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்தவர் ரியாஸ் (36) டிரைவரான இவர், நேற்று இரவு மதுபோதையில் இருந்துள்ளார். அதிக சப்தத்துடன் சினிமா பாடல் கேட்டுக் கொண்டிருந்தார்.

பாடல் சப்தம் அதிகமாக இருந்ததால் சக டிரைவர் ஆறுமுகம், பாட்டு சப்தத்தை குறைத்தார். அப்போது போதையில் இருந்து ரியாஸ் வாக்குவாதம் செய்துள்ளார்.

வாக்குவாதம் அதிகரித்து இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதனிடையே ரியாஸ் தான் வைத்திருந்த மது பாட்டிலால், ஆறுமுகத்தைத் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சுந்தராபுரம் போலீசார் ரியாசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp