கோவை: கோவையில் ஒரு சில தினங்களில் விமான சேவை சீராகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ விமான நிறுவனத்தின் விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருவதால் நாடு முழுவதும் விமான பயணிகள் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
பலர் ஊர் திரும்ப முடியாமல் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். கோவையில் 23 முதல் 29 இண்டிகோ விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே இங்கும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில், பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தை அந்த நிறுவனம் திருப்பிச் செலுத்தி வருகிறது.
இருந்த போதிலும், ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்த பயணத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த நேரத்தில் பயணத்தை மேற்கொள்ளாத நிலையில் பல்வேறு இழப்புகளைச் சந்தித்து வருவதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கோவையில் விமான சேவை 2 அல்லது 3 நாட்களில் சரியாகும் என்றும் கோவை விமான நிலைய இயக்குனர் முகமது ஆரிப் தெரிவித்துள்ளார்.
புதிய விமான அட்டவணை அல்லது மாற்று சேவைகள் குறித்து தெரிந்துகொள்ள விமான நிலைய அதிகாரிகள் அல்லது இண்டிகோ நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



