JOB NEWS: இந்தியாவின் முன்னணி மத்திய அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் மொத்தம் 394 ) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1959ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட், நாட்டின் மிகப்பெரிய அரசு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் ஆகும். பெட்ரோல், டீசல், எல்பிஜி, விமான எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு எரிசக்தி தயாரிப்புகளை உற்பத்தி, சுத்திகரிப்பு, விநியோகம் மற்றும் மார்க்கெட்டிங் செய்வதில் இந்த நிறுவனம் முன்னணியில் உள்ளது.
இதில் டெக்னீஷியன் அப்ரண்டிஸ், டிரேட் அப்ரண்டிஸ், டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் அடங்கும்.
நிரப்பப்பட உள்ள பணியிடங்கள்:
டெக்னீஷியன் அப்ரண்டிஸ் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டெலிகம்யூனிகேஷன் & இன்ஸ்ட்ரூமென்டேஷன்)
டிரேட் அப்ரண்டிஸ் (அசிஸ்டென்ட் – ஹியூமன் ரிசோர்ஸ், அக்கவுண்டன்ட்)
டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் (புதிய பயிற்சியாளர்கள்)
டொமஸ்டிக் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் (திறனாய்வு சான்றிதழ் பெற்றவர்கள்)
இந்த பிரிவுகளில் மொத்தமாக 394 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
மண்டல வாரியான காலியிடங்கள்:
கிழக்கு மண்டலம்:
அஸ்ஸாம் (10), பீகார் (21), ஜார்கண்ட் (03), உத்திரப் பிரதேசம் (29), மேற்கு வங்கம் (38)
மேற்கு மண்டலம்:
குஜராத் (77), மத்தியப் பிரதேசம் (05), மகாராஷ்டிரா (12), ராஜஸ்தான் (42)
வடக்கு மண்டலம்:
டெல்லி (07), ஹரியானா (11), இமாச்சலப் பிரதேசம் (04), பஞ்சாப் (19), ராஜஸ்தான் (03), உத்திரப் பிரதேசம் (08), உத்தராகண்ட் (02)
தெற்கு மண்டலம்:
ஆந்திரப் பிரதேசம் (02), கர்நாடகா (05), தமிழ்நாடு (33)
தென்கிழக்கு மண்டலம்:
ஆந்திரப் பிரதேசம் (14), சத்தீஸ்கர் (05), ஜார்கண்ட் (02), ஒடிசா (37), தெலங்கானா (05)
கல்வித் தகுதி:
12ஆம் வகுப்பு, டிப்ளமோ அல்லது இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இந்த அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.
வயது வரம்பு:
31.01.2026 தேதிப்படி 18 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிகளின்படி வயது தளர்வுகள் வழங்கப்படும்:
SC/ST – 5 ஆண்டுகள்,
OBC – 3 ஆண்டுகள்,
PwBD (General/EWS) – 10 ஆண்டுகள்,
PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்,
PwBD (OBC) – 13 ஆண்டுகள்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் ஒரு ஆண்டுக்கு மட்டும் அப்ரண்டிஸாக பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
டிரேட் அப்ரண்டிஸ் (DEO) –http://apprenticeshipindia.gov.in
டெக்னீஷியன் அப்ரண்டிஸ் – http://nats.education.gov.in/student_register.php
விண்ணப்பம் ஆன்லைன் மூலம் மட்டுமே செய்ய வேண்டும்.
விண்ணப்ப தொடக்கம்: 28ஆம் தேதி
கடைசி தேதி: பிப்ரவரி 10, 2026
தேவைப்படுவோர்க்கு பகிர்ந்து உதவுங்கள் வாசகர்களே..!

