பெரியார் அறிவுலகம் முறைகேடு?- 100% நடவடிக்கை- அமைச்சர் சம்பத்குமார் எச்சரிக்கை…

கோவை: பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருந்தால் 100 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சம்பத் குமார் எச்சரித்துள்ளார்.

பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்றும், தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டால் 100 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழு தொழில்முனைவோருக்கான வங்கிக் கடன் இணைப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சம்பத் குமார், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 618 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.92 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

இதற்கு முன்னதாக, கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர், தமிழக அரசின் சார்பில் பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகள் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தனர். தொடர்ந்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

Advertisement

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சம்பத் குமார், மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவி வழங்கும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.

தொடர்ந்து, பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் வாங்கியதில் அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Advertisement

அதற்கு பதிலளித்த அமைச்சர், இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்துவார்கள் என்றும், இதற்காகக் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். விசாரணையில் தவறுகள் நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது 100 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

மேலும், மாணவர்களுக்கு தரமான மிதிவண்டிகளை வழங்குவதில் அரசு உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மிதிவண்டிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தகுதியான நிறுவனங்களிடம் மட்டுமே மிதிவண்டிகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், எந்த வகையிலும் ரூ.100 கோடி அல்லது ரூ.200 கோடிக்கு மேல் டெண்டர் விடுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

“ஜிபே பண்ணிட்டேன்…” கோவையில் மளிகைப் பொருட்கள் வாங்கி ஏமாற்ற முயன்றதாகப் பெண் மீது புகார்!

கோவை பவர்ஹவுஸ் பகுதியில் உள்ள கடையில், ஜிபே மூலம் பணம் செலுத்தியதாகக் கூறி ரூ.2,500 மதிப்பிலான பொருட்களை வாங்கிச் செல்ல முயன்றதாகப் பெண் ஒருவரை ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...