ஈஷா… அனுமதி இருக்கு… கோவை கலெக்டர் நீதிமன்றத்தில் பதில்!

கோவை: ஈஷா அறக்கட்டளை தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றே எரிவாயு தகன மேடையை கட்டியுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கோவை இக்கரை போளுவாம்பட்டியில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக எரிவாயு தகன மேடையை ஈஷா அறக்கட்டளை கட்டியது. இதனிடையே, எரிவாயு தகன மேடை முறையாக அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது எனக்கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Advertisement

இந்த வழக்கில் கோவை மாவட்ட ஆட்சியர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில்,

“தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ‘நிறுவுவதற்கான ஒப்புதல்’ (CTE) உட்பட அனைத்து அனுமதிகளை பெற்றும், தேவையான விதிமுறைகளையும் பின்பற்றியே ஈஷா அறக்கட்டளை எரிவாயு தகன மேடையை கட்டியுள்ளது.

மேலும், தகன மேடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த மனுதாரர் தகன மேடைக்கு அருகிலுள்ள நில உரிமையாளராக இருந்தாலும், அவரின் வீட்டுக்குத் தேவையான கட்டுமான அனுமதியை பெறவில்லை, அதற்கான வீட்டு வரியையும் செலுத்தவில்லை” என்று தெரிவிக்கபட்டு உள்ளது.

இதுகுறித்து ஈஷா தரப்பினர் கூறுகையில், “ஈஷா கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 15 மயானங்களை பராமரித்து செயல்படுத்தி வருகிறது. இந்தச் செயல்களை முடக்க முயலும் சில குழுக்கள் தவறான நோக்கங்களோடு செயல்படுகின்றன. மக்கள் நலனுக்காக ஈஷா அறக்கட்டளை மேற்கொள்ளும் பணிகளைத் தடுப்பதே இக்குழுக்களின் நோக்கமாக உள்ளது.” என்றனர்.

Advertisement

Recent News