கோவையில் ஐடி பெண் ஊழியரின் தவறான முடிவு

கோவை: ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம்பெண் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் முறியாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்தியா (25). இவர் கோவை இடையர்பாளையம் பகுதியில் தங்கிருந்து கடந்த 6 மாதமாக காந்திபுரத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த ஒரு வருடமாக தன்னுடன் பணிபுரிந்து வரும் ஒருவரை காதலித்து வந்துள்ளர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காதலன் தனது காதலி சந்தியாவின் தாயார் ருக்குமணிக்கு போன் செய்தார்.

அப்போது சந்தியா விஷத்தைக் குடித்து விட்டதாகவும், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ருக்குமணி உடனே கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரிடம் டாக்டர்கள் வரும் வழியிலேயே சந்தியா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தியா எதற்காக விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recent News

சிவானந்தா காலனியில் 31ம் தேதி மின்தடை!

கோவை: சிவானந்தா காலனியில் ஜனவரி 31ம் தேதி மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. கோவை துணை மின் நிலைய செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- டாடாபாத் துணை மின் நிலையத்தில் வருகிற 31ம்...

Video

Join WhatsApp