கோவையில் கனவுகளோடு பணம் கட்டிய பெற்றோர்… கையை விரிக்கும் பள்ளி…

கோவை: போட்டித் தேர்வுகளுக்கான Refund கட்டணத்தை, திருப்பித் தராமல் சுகுணா பிப் பள்ளி நிர்வாகமும், தனியார் நிறுவனமும் ஏமாற்றி விட்டதாக பெற்றோர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

காளப்பட்டி பகுதியில் இயங்கி வரும் Suguna PIP பள்ளி, FITTJEE என்ற நிறுவனத்துடன் இணைந்து அந்த பள்ளி மாணவர்களுக்கு நீட் மற்றும் ஜேஇஇ பயிற்சிக்கான தனி வகுப்புகளை நடத்தியது.

Advertisement

இதற்காக பள்ளிக் கட்டணத்தை தவிர்த்து ஒரு லட்சம் ரூபாய் Refund கட்டணமாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வகுப்புகள் முடிந்து 60 நாட்களுக்குள் அந்த ஒரு லட்சம் ரூபாய் திருப்பி தரப்படும் என்றும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

தனது மகன்/மகளை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுகளுடன் கடந்த சில ஆண்டுகளாகவே, இந்த திட்டத்தில் பலரும் அவர்களது குழந்தைகளை படிக்க வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் வகுப்புகள் முடிந்த 262 மாணவர்களுக்கு அந்த Refund கட்டணம் திருப்பி வழங்கப்படவில்லை என்று பெற்றோர் குற்றம்சாட்டி வந்தனர்.

Advertisement

இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டால், தங்களுக்கும் அந்த நிறுவனத்திற்கும் சம்பந்தமில்லை என்றும், அந்த நிறுவனத்திற்கு கட்டடத்தை வாடகைக்கு தான் விட்டுள்ளோம் என்று பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் அளிப்பதாக பெற்றோர் குமுறுகின்றனர்.

இதனிடையே தங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், “இந்த பயிற்சி மையத்ஹ்டில் கோவை மாணவர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வந்தனர். இந்த ஆண்டு மட்டும் 262 மாணவர்களுக்கு ரீபண்ட் கட்டணம் திருப்பித் தரப்படவில்லை.

எங்கள் பணம் ரூ.2 கோடி 62 லட்சம் பள்ளி நிர்வாகத்திடமும், தனியார் நிறுவனத்திடமும் உள்ளது. அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால், பல சிக்கல்கள் ஏற்பட்டு ஆசிரியர்கள் முறையாக மாணவர்களுக்கு வகுப்புகளையும் எடுக்காமல் பயிற்சி பாதிக்கப்பட்டது. எங்கள் பணத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும்.” என்றனர்.

இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கும் பொழுது தங்களுக்கும் அந்த நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் பள்ளி நிர்வாகம் அந்த கட்டிடத்தை அந்த நிறுவனத்திற்கு வாடகைக்கு தான் விட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Recent News

சினிமா நடிகரின் கட்சியை முடித்து விட்ட தொகுதி கோவை தெற்கு தொகுதி- வானதி சீனிவாசன் பெருமிதம்…

கோவை: பெரிய சினிமா நடிகரை தோற்கடித்த தொகுதி தெற்கு தொகுதி என்று வானதி சீனிவாசன் பெருமிதம் கொண்டார். பாஜக வாக்குச் சாவடி முகவர்களுக்கான பயிலரங்கம் கோவை புளியகுளம் பகுதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில்...

Video

Join WhatsApp