கோவை: கோவை ஃபன் ரிபப்ளிக் மாலில் வரும் குழந்தைகளுக்கான வித்தியாசமான மற்றும் பயனுள்ள அனுபவ நிகழ்வாக ‘Jungle Jam’ நிகழ்ச்சி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் கற்பனை திறன், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, விளையாட்டு உற்சாகம் மற்றும் கற்றல் ஆர்வத்தை ஒரே இடத்தில் இணைக்கும் விதமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது ‘Jungle Jam’ நிகழ்ச்சி.
Waste to Wealth
‘Waste to Wealth’ என்ற மையக்கருத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வில், பயன்படுத்தப்பட்ட பொருட்களை படைப்பாற்றலுடன் மாற்றி புதிய பயன்பாட்டுப் பொருட்களாக உருவாக்கும் செயல்பாடுகள் இடம்பெறுகின்றன. மேலும், குழந்தைகளுக்காக தனியாக வடிவமைக்கப்பட்ட ஜங்கிள் தீம் கொண்ட பல எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஈகோ-லெர்னிங் அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் குழந்தைகளுக்காக 10-க்கும் மேற்பட்ட சுவாரஸ்யமான ‘Waste to Wealth’ செயல்பாடுகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக, bottle art, paper craft, eco mask making, recycled toy making, cardboard creations, seed art, leaf collage, DIY planters, best out of waste model making, reusable decor making, mini nature craft, upcycled fun objects போன்ற பல படைப்பாற்றல் சார்ந்த குழந்தைகள் செயல்பாடுகள் நடத்தப்பட உள்ளன.
மேலும் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் ‘Know Your Jungle’, eco learning games, mini jungle treasure hunt, Jungle Obstacle Game உள்ளிட்ட பல்வேறு ஜங்கிள்-தீம் கொண்ட விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கற்றலும், விளையாட்டும், ஆர்வமும் கலந்த இந்த அனுபவம், குழந்தைகளுக்கு புதுமையான அனுபவமாக இருக்கும் என்று ஃபன் ரிபப்ளிக் மால் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஃபன் ரிபப்ளிக் மால் நிர்வாகத்தினர் கூறியதாவது:-
நிகழ்வில் பங்கேற்கும் குழந்தைகள், தாங்களது படைப்புகளே தாங்களே எடுத்துச் செல்லலாம். அதோடு, பங்கேற்பு சான்றிதழ் மற்றும் ‘Jungle Jam’ பெயருடன் சிறப்பு badge-களும் வழங்கப்பட உள்ளன. குழந்தைகளுக்கு இது வெறும் நிகழ்வு அல்ல, நினைவாக சேமித்து வைக்கக்கூடிய அனுபவமாக இருக்கும்.
குழந்தைகளுக்கான முக்கிய செயல்பாடுகள் தினமும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும். இந்த நிகழ்வு ஏப்ரல் 17 முதல் தொடங்குகிறது. குழந்தைகளுக்கு இந்த அனுபவத்தை வழங்க விரும்பும் பெற்றோர் உடனே தங்களது வருகையை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
குழந்தைகளுக்கான கற்றலும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வும், பொழுதுபோக்கும், சாகசமும் ஒரே இடத்தில் கிடைக்கும் இந்த ‘Jung Jam’ நிகழ்வு, கோவையில் இந்த கோடைக்காலத்தின் கவனிக்க வேண்டிய family attraction-ஆக இருக்கும் என்றனர்.
இந்த நிகழ்வில் பதிவு செய்ய விரும்புவோர் உடனே 9513244317 என்ற எண்ணிற்கு அழைத்து register செய்யலாம்.

