கோவை: வால்பாறை அருகே ஒற்றை காட்டு யானை வாகனங்களை மறைத்து நின்றது.
வால்பாறை அடுத்த கேரள மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதிக்குள் கபாலி என்ற ஒற்றை காட்டு யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இந்த யானை சாலைகளில் அவ்வப்போது நடமாடுவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து அச்சத்துடன் அவ்வழியே பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு வாகனங்களை வழிமறித்து நின்ற யானை சாலையோர மரங்களை உடைத்து தின்றவாறு சாலையை மறைத்து நின்றுள்ளது.

அதேபோல் அதிரப்பள்ளியில் இருந்து மழுக்கபாறை நோக்கி வந்த கேரளா அரசு பேருந்து மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனம் எதிர்புறமாக சாலையில் நின்றது. அதனிடையே சில வாகனங்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
நீண்ட நேரம் அங்கேயே நின்ற யானையை தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானையை வனத்துறைக்குள் விரட்டினர். பின்பு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது.
இது போன்று அடிக்கடி அந்த யானை சாலையை வழிமறித்து நிற்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே இருப்பதால் யானையை வனப்பகுதிக்குள்ளேயே வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.



