புதிய அதிகாரியை உருவாக்கியது கனகராஜ் அகாடமி!

கோவை: குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற கனகராஜ் இலவச IAS பயிற்சி மைய மாணவி இரா.ரேஷ்மாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

அரசு கலைக்கல்லூரி அரசியல் துறை தலைவரான கனகராஜ் தனது இலவச IAS பயிற்சிப் பள்ளி மூலம் ஏழை எளிய மாணவ-மாணவிகளின் IAS கனவை நனாவ்க்கி வருகிறார்.

இதனிடையே, கனகராஜ் இலவச IAS பயிற்சி மையத்தில் பயின்ற மாணவி இரா.ரேஷ்மா குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கான பாராட்டு விழா மையத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ப்ரோபெல் தொழில் நிறுவனத்தின் CSR பிரிவின் தலைவர் வித்யா செந்தில் குமார் கலந்து கொண்டார்.

மாணவர்கள் வித்யா செந்தில்குமார் பேசியதாவது:-

அரசுப் பதவியில் உள்ள IAS, IPS அதிகாரிகள் நாட்டின் முன்னேற்றத்தில் பெரும் பங்கை ஆற்றுகின்றனர். மாவட்ட ஆட்சியராகவோ, துறையின் செயலராகவோ இருக்கும் IAS அதிகாரிகள் பல இலட்ச மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும். அரசின் திட்டங்களின் ஊற்றுகண்ணாக IAS அதிகாரிகள் உள்ளனர்.

எடுத்துகாட்டாக 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை கூறலாம். இந்த இட ஒதுக்கீ ட்டின். மூலம் ஆண்டுதோறும் ஏழை எளிய பின்னணியில் இருந்து பலநூறு மாணவ மாணவியர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கின்றனர். கல்வி மற்றும் பொது சுகாதாரம் ஆகிய இரண்டு துறைகளில் நம் நாடு முன்னேறினால் உலக முன்னோடி நாடாக வளர முடியும். பிரபல் நிறுவனம் கல்வி, பொது சுகாதாரம், மகளிர் முன்னேற்றம், ஊரக முன்னேற்றம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போன்ற துறைகளில் Corporate Social Responsibilty மூலம் மாணவர்களுக்கும் மக்களுக்கும் உதவிகளை செய்வது மன திருப்தியை வழங்குகிறது. என்றார்.

குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற இரா. ரேஷ்மா கூறியதாவது:-

நம் நாட்டில் உள்ள கடுமையான தேர்வுகளில் ஒன்றான குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றதில் நான் மிகுந்த மகிழ்சி அடைகிறேன். எனது தந்தை ரவிசங்கர் தனியார் நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார். தாய் பிரியா ஜோதி இல்லாதரசியாக உள்ளார். தம்பி கபிலேஷ் கல்லூரியில் படிக்கிறார். எனது தந்தை, தாய், தம்பி ஆகிய மூவரும் குடிமைப் பணி தேர்வுக்கு தயாரான பொழுது எனக்கு உறுதுணையாக இருந்தனர்.

மூன்று வருடங்களாக கனகராஜ் இலவச IAS பயிற்சி மையத்தில் படித்தேன். போது அறிவு பாடங்களான அரசியலமைப்பு, பொருளாதாரம், சர்வதேச அரசியல், புவியியல், வரலாறு, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்ற இந்த பயிற்சி மையத்தில் படித்தேன்.

விருப்ப பாடமாக புவியியல் பாடத்தை தேர்ந்தெடுத்தேன். குடிமைப் பணி தேர்வில் நேர்காணல் மிக முக்கியமானது ஆகும். எனக்கு நேர்காணலில் 275 மதிப்பெண்களுக்கு 205 மதிப்பெண்கள் பெற்றேன்.

Kanagaraj IAS academy felicitation

குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெறுவதற்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் நன்கு படிக்க வேண்டும். திட்டமிடல் மிகவும் முக்கியமானது ஆகும். தோல்வியை கண்டு நாம் துவண்டு போகக்கூடாது. குடிமை பணி தேர்வில் தோல்வி என்ற கசப்பான மருந்தை அருந்திய பிறகுதான் வெற்றி என்ற கனியை சுவக்க முடியும்.

நேர மேலாண்மை மிகவும் முக்கியம். பல மாதங்கள் கடுமையாக படிக்க வேண்டி உள்ளதால் நல்ல ஓய்வு, தூக்கம் ஆகியவை கவனத்தில் வைக்க வேண்டிய விசயங்களாகும்.

நல்ல பொழுதுபோக்கு ஒன்றை மாணக்கர்கள் பின்பற்ற வேண்டும். தினந்தோறும் செய்தி தாள்களை வாசித்தல் அவசியம் ஆகும். தேசிய, சர்வதேச நடப்புகளில் இருந்து நிறைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. பாடங்களை நாம் புரிந்து படிக்க வேண்டும். பழைய கேள்வித்தாள்களை அடிக்கடி கூர்ந்து ஆராய வேண்டும்.பல இலட்சம் மாணவ மாணவிகள் எழுதிய தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது.என்று இரா.ரேஷ்மா கூறினார்

அரசு கலைக்கல்லூரி அரசியல் துறை தலைவரும் கட்டணமில்லா பயிற்சியை பல ஆண்டுகளாக வழங்கி வரும் முனைவர் கனகராஜ் கூறியதாவது:-

இந்த வருடம் குடிமை பணி தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளில் நமது மாநில மாணவ மாணவிகள் முதல் பத்து இடங்களில் வருவது இதுதான் முதல் முறை ஆகும்.

இத்தேர்வில் இந்த ஆண்டு வெற்றி பெற்ற நமது மாநில மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகம் ஆகும். குடிமைப் பணி தேர்வுகளில் தமிழ்நாட்டின் பொற்காலம் மீண்டும் திரும்புகிறது என நாம் மகிழ்ச்சி அடையும் நேரம் இந்த ஆண்டாகும்.

எங்கள் பயிற்சி மைய மாணவி இரா. ரேஷ்மா இந்த முறை IFS என்று அழைக்கபடும் இந்திய வெளியுறவு பணி அல்லது IRS என்று அழைக்கபடும் இந்திய வருமான வரி பணியை பெறுவார்.

மீண்டும் இந்த தேவை எழுதி அவர் IAS பணியில் சேரவேண்டும். இருபத்தி ஒன்றா நூற்றாண்டு பெண்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளையும் வசதிகளையும் உருவாக்கியுள்ளது. இந்த வாய்ப்புகளை மாணக்கர்கள் முக்கியமாக மாணவிகள் நன்கு பயன் படுத்த வேண்டும் குடிமை பணி தேர்வில் வெற்றி பெற நாம் விருப்ப பாடத்தை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

தினந்தோறும் மாலை நேரங்களில் தொலைக்காட்சிகளில் நடை பெறும் விவாதங்களை பார்க்க வேண்டும். பள்ளி கூட புத்தகங்களை திரும்ப படிக்க வேண்டும் என்று முனைவர் கனகராஜ் கூறினார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் கார் தீ பிடிப்பு- சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்…

கோவை சின்னியம்பாளையம் அருகே அவினாசி சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், ஓட்டுநர் சாமர்த்தியமாக இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.