மேட்டுப்பாளையம்: கேரளாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை, காரமடையை சேர்ந்த கராத்தே வீரர்கள் வென்றனர்.
கோவை மாவட்டம் காரமடை பகுதியில் இருந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 50 காரத்தே வீரர்கள், கடந்த வாரம் கேரளா மாநிலம் கொச்சியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் குமிட்டி, கட்டா போன்ற பிரிவுகளில் ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் உள்ளிட்டவை கீழ் கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இதில் காரமடை காரத்தே வீரர்கள் சுமார் 50 வெற்றி கோப்பைகளை பெற்று, ஓட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்று, சொந்த ஊர் திரும்பிய வீரர்களுக்கு, காரமடை அருகே உள்ள சிக்காரம்பாளையத்தில் பெற்றோர்கள் பாராட்டு விழா நடத்தினர்.
இதில் வெற்றி பெற்று கோப்பைகளுடன் வந்த வீரர்களை, பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் வரவேற்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

