கோவை: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் INDIA கூட்டணி கட்சியினர் விழிப்புணர்வுடன் வாக்குகளை பதிவு செய்வார்கள் என கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார் கோவையில் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவக்குமார் விமான மூலம் கோவை வந்தடைந்தார்.
கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த வரவேற்பினை ஏற்றுக் கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது இன்று நடைபெறும் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் குறித்தான கேள்விக்கு
ஜனநாயக அமைப்பில் எச்சரிக்கையாக ஒன்றுபட்டு போராடுகிறோம், INDIA கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு விழிப்புணர்வான வாக்கை பதிவு செய்வார்கள் என்று நம்புகிறோம் என தெரிவித்தார்.
13-வது ஆவணமாக ஆதார் அட்டை இருக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்,
ஆதார் அட்டை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மிகவும் அவசியமான ஆவணம் எனவும், அதை யுபிஏ அரசு தான் அறிமுகப்படுத்தியது, இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை ஆவணம் என தெரிவித்தார்.
இதை தான் காங்கிரஸ் கட்சி மற்றும் யுபிஏ அரசாங்கம் நாட்டின் குடிமகன்களுக்கு வழங்கியது என தெரிவித்தார்.மேலும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில்
நாங்கள் கேட்பது விழிப்புணர்வான வாக்குகள் தான் என தெரிவித்தார்.