கோவை: அதி கனமழை எச்சரிக்கை காரணமாக மூடப்பட்ட கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கோவையில் ஆகஸ்ட் 5, 6ம் தேதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால், பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மூடப்பட்டது.
ஆனால், இரு தினங்களிலும் கோவையில் எதிர்பார்த்த மழைப்பொழிவு காணப்படவில்லை. இந்த நிலையில், கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான (ரெட் அலர்ட்)வானிலை அறிவிப்பு கொடுக்கப்பட்ட காரணத்தால் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
தற்போது மழை இல்லாத காரணத்தாலும் அருவியில் தண்ணீர் வரத்து சீராக வருவதாலும் மீண்டும் இன்று (7.8.2025) முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட வன அலுவலர் உத்தரவுப்படி திறக்கப்படுகிறது. என்று வனத்துறை அறிவித்துள்ளது
கோவை செய்திகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈